Primary tabs


ழிக்கு மீர்ங்குன்ற நாட
குலங்கருதி வாழ்வார் மகள்.”
அவள் அறிவுறுத்துப் பின் வா என்றலும் - தலைவனை நோக்கி நீ
காதலித்தவட்கு
நீயே சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வருக
வென்றலும்:
‘அவன் அறிவுறுத்து’ என்று பாடமோதுவாரும் உளர்.
உ-ம்:
“தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கிஃதுரைப்பின்
என்னையும் நாணப் படுங்கண்டாய் - மன்னிய
வேயேர்மென் றோளிக்கு வேறாய் இனியொருநாள்
நீயே யுரைத்து விடு.”
இது நீயே யுரையென்றது.
“நாள்வேங்கை பொன்சொரியும் நன்மலை நன்னாட
கோள்வேங்கை போற்கொடியர் என்னைமார்-கோள்வேங்கை
அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்
கென்னையோ நாளை எளிது.”
(திணை.நூற்.20)
இது கையுறைமறுத்துப் பின் வருக என்றது.
இவை ஒரு கூற்றாக வருவன வுளவேற் காண்க.
பேதைமை ஊட்டலும் - அங்ஙனம் பின் வருகவென்றுழி முன்
வந்தானை
அறியாமை ஏற்றிக் கூறலுந், தலைவியையும் அங்ஙனம்
அறியாமை யேற்றிக் கூறலும்:
உ-ம்:
“நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று
கடுங்களிறு காணிரோ வென்றீர் - கொடுங்குழையார்
யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத்
தேனற் கிளிகடிகு வார்.”
“வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பில்
வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ்
சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புறம்
போந்ததில் ஐய களிறு.”
(திணை.ஐம்.8)
இவை தலைவனைப் பேதைமை ஊட்டின.
“நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி - எறிந்துழுது
செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு
நொந்தினைய வல்லளோ நோக்கு.” (திணை.நூற்.24)
இது தலைவியைப் பேதைமை யூட்டியது. “இளையள் விளைவிலள்”
என்பதூஉம் இதன்கண் அடங்கும்.
“புன்றலை மந்திக் கல்லா வன்புறழ்
குன்றுழை நண்ணிய முன்றிற் போகாது
எரியகைந் தன்ன வீததை யிணர
வேங்கையம் படுசிலைப் பொருந்திக் கைய
தேம்பெய் தீம்பால் வௌவலிற் கொடிச்சி
எழுதெழில் சிதைய அழுத கண்ணே
தேர்வண் சோழர் குடந்தை வாயின்
மாரியங் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயலுறு நீலம் போன்றன விரலே
பா