தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5318


 

மற் கிளந்த எண்வகைக் கிளவியும்:

உ-ம்:

“நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பி
நின்குறி வந்தனென் இயல்தேர்க் கொண்க
செல்கஞ் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்தும் வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.”          (குறுந்.114)

‘வந்தனென்’ என்றும் ‘என்மகள்’ என்றும் ஒருமை  கூறிச் ‘செல்கம்’
என்ற உளப்பாட்டுப் பன்மையான் தலைவி வரவுங்கூறி இடத்துய்த்தவாறு
முணர்த்தினாள். ‘செலவியங் கொண்மோ’   என்றது  நீயே  அவளைப்
போகவிடுவாய் என்றதாம். நாட்டந் தன்மனத்து நிகழாநிற்றலும்  அவன்
மனத்துக் குறையுணர்த்துதல்  நிகழாநிற்றலு  மென்னும்  இரண்டினையும்
எஞ்சாமற் றழீஇநிற்கும் இவ்வெட்டு மென்றற்கு ‘எஞ்சாது’ என்றார்.

வந்த  கிழவனை  மாயஞ்  செப்பிப்   பொறுத்த   காரணங்குறித்த
காலையும்  -   தன்   முன்னர் வந்து  நின்ற  தலைவனைத்  தோழி
எதிர்ப்பட்டு   நின்றேயும்  வாராதான்போல  மாயமேற்றி   அதனைப்
பொறுத்த காரணங் குறிப்பினாற் கொள்ளக் கூறுங்காலைக் கண்ணும்:

காரணமாவது  நீ  அரியையாதலின்   இவள்   ஆற்றாளாமென்று
எதிர்கொள்கின்றே மென்றல்; கூட்டம்  நிகழ்ந்தபின்  தோழி  இவ்வாறு
கூறுதற்கு உரியளென்று அதன்பின் வைத்தார்.  இஃது  அவன்  வரவை
விரும்பியது, வரைவு கடாயதன்று.

உ-ம்:

“நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலைக்
கடல்பா டழிய இன்மீன் முகந்து
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரு முதியருங் கிளையுடன் துவன்றி
உப்பொய் உமணர் அருந்துறை போக்கும்
ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ
அயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப்
பெருங்களந் தொகுத்த வுழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப்
பாடுபல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
கோடுயர் திணிமணல் துஞ்சுந் துறைவ
பெருமை யென்பது கெடுமோ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:32:54(இந்திய நேரம்)