தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5333


 

பிரிவடையாற்றாத    தலைவியைத்    தோழி   நன்னிமித்தங்கூறி
வற்புறுத்தது.

ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும் -தலைவன் வருகின்ற நெறியினது
தீமையைத் தாங்கள் அறிதலுற்றதனானே எய்திய கலக்கத்தின் கண்ணும்:
தோழிமேன கிளவி.

உ-ம்:

“கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே
உருகெழு மரபிற் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியனகர்க் கானவர் துஞ்சார்
வயக்களிறு பொருத வாள்வரி யுழுவை
கன்முகைச் சிலம்பிற் கழூஉ மன்னோ
மென்றோள் நெகிழ்ந்துநாம் வருந்தினு மின்றவர்
வாரா ராயினு நன்றுமற் றில்ல
உயர்வரை யடுக்கத் தொளிறுபு மின்னிய
பெயல்கான் மயங்கிய பொழுதுகழி பானாள்
திருமணி யரவுத்தேர்ந் துழல
உருமுச்சிவந் தெறியு மோங்குவரை யாறே.”      (நற்.255)

“கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு
மடிசெவி வேழம் வெரீஇ - அடியோசை
அஞ்சி யொதுங்கு மதருள்ளி யாரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண்.”           (ஐந்திணை ஐம்.16)

இவை இரவுக் குறிவரவான் தலைவி வருந்துவளென்றது.

“கரைபொரு கான்யாற்றங்  கல்லதர்”  என்பதும்  (யா.வி.76)  அது.
“கூருகி ரெண்கின்” என்னும் (112) அகப்பாட்டுங் காண்க.

‘கலக்கம்’ எனப் பொதுப்படக் கூறியவதனால் ஆற்றிடை ஏதமின்றிச்
சென்றமை  தோன்ற  ஆண்டு  ஒரு  குறி  செய்  எனக்  கூறுவனவுங்
கொள்க.

“கான மானதர் யானையும் வழங்கும்
வான மீமிசை யுருமுநனி உரறும்
அரவும் புலியும் அஞ்சுதக வுடைய
இரவுச் சிறுநெறி தமியை வருதி
வரையிழி யருவிப் பாடொடு பிரசம்
முழவுச்சேர் நரம்பி னிம்மென விமிரும்
பழவிற னனந்தலைப் பயமலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை யொன்றோ
இன்றுதலை யாக வாரல் வரினே
ஏமுறு துயர நாமிவ ணொழிய
எற்கண்டு பெயருங் காலை யாழநின்
கற்கெழு சிறுகுடி யெய்திய பின்றை
ஊதல் வேண்டுமாற் சிறிதே வேட்டொடு
வே

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:35:51(இந்திய நேரம்)