தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5345


 

றல்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறைஎனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்;

ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல்
நின்தலை வருந்தியாள் துயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே.”      (கலி.133)

இது முற்காலத்து வரைவுகடாவுமாறு போலன்றி வரைவு கடாயது.

“யாரை யெலுவ யாரே நீயெமக்
கியாரையு மல்லை நொதும லாளனை
யனைத்தாற் கொண்கவெம் மிடையே நினைப்பிற்
கடும்பகட் டியானை நெடுந்தேர்க் குட்டுவன்
வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன
ஓங்கற் புணரி பாய்ந்தாடு மகளிர்
அணிந்திடு பல்பூ மரீஇ யார்ந்த
ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக்
கடல்கெழு மாந்தை யன்னவெம்
வேட்டனை யல்லையா னலந்தந்து சென்மே.”    (நற்.395)

இது நலந்தொலைவுரைத்து வரைவுகடாயது.

ஆங்கு அதன்  தன்மையின்  வன்புறை  உளப்பட  -  அங்ஙனங்
கடாவியவழி  அவ்வரைந்து   கோடன்   மெய்யாயினமையின்வதுவை
முடியுமளவும் ஆற்றுதற்கு வற்புறுத்துக் கூறுதல் உளப்பட:

தன்மை - மெய்ம்மை. எனவே, முன்பொய்ம்மையான வற்புறுத்தலும்
பெற்றாம்.

உ-ம்:

“நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி யத்தை
பெருங்கன் னாடன் வரைந்தென வவனெதிர்
நன்றோ மகனே யென்றனென்
நன்றே போலு மென்றுரைத் தோனே.”        (குறுந்.389)

இது,   தலைவன்   குற்றேவன்மகனான்   வரைவுமலிந்த   தோழி
தலைவிக்குரைத்தது.

“கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் வரிக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரு மவனொடு மொழிமே.”            (குறுந்.51)

என வரும்.

“கொடிச்சி காக்கு மடுக்கற் பைந்தினை
முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:38:13(இந்திய நேரம்)