தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5391


 

டு
தான்வரு மென்ப தடமென் றோளி
யுறுகணை மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடைக்
கல்மிசைக் கடுவளி யெடுத்தலில் துணைசெத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்
கருமுக முசுவின் கானத் தானே.”            (அகம்.121)

இது நெஞ்சிற்குக் கூறியது.

வேற்று  நாட்டு அகல் வயின் விழுமத்தானும் - அங்ஙனம் வேற்று
நாட்டிற்  பிரியுங்காலத்துத்  தானுறும்  இடும்பையிடத்து:  தலைவற்குக்
கூற்று நிகழும்.

விழுமமாவன:   பிரியக்   கருதியவன்   பள்ளியிடத்துக்  கனவிற்
கூறுவனவும்,    போவேமோ     தவிர்வேமோ   என    வருந்திக்
கூறுவனவும்,  இவள்  நலன்   திரியுமென்றலும்,  பிரியுங்கொலென்று
ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு
அழுங்குதலும் பிறவுமாம்.

“நெஞ்ச   நடுக்குற”   (கலி.24)  என்னும் பாலைக்கலியுள் கனவிற்
கூறியவாறு காண்க.

“உண்ணா மையி னுயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத் தான்றோர் போல
வரைசேர் சிறுநெறி நிரைபுடன் செல்லுங்
கான யானை கவினழி குன்றம்
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த
சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி
ஒழியின் வறுமை யஞ்சுதி யழிதக
வுடைமதி வாழிய நெஞ்சே நிலவென
நெய்கனி நெடுவேல் எஃகிலை யிமைக்கு
மழைமருள் பஃறோன் மாவண் சோழர்
கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெருங்கட லோதம் போல
ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே.”  (அகம்.123)

இது போவேமோ தவிர்வேமோ என்றது.

“அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்
தாளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு வயக்களி றிழுக்குந்
துன்னருங் கானம் என்னாய் நீயே
குவளை யுண்கண் இவளீண் டொழிய
வாள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:47:09(இந்திய நேரம்)