தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5394


 

தையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்
அந்தீங் கிளவிக்குறுமகள்
மென்றோள் பெறல்நசைஇச் சென்றவெ னெஞ்சே” (அகம்.9)

எனவரும்.   இன்னும்   வேறுபட  வருவனவெல்லாம்  இதன்கண்
அடக்குக.

அவ்வழிப் பெருகிய  சிறப்பின்கண்ணும்  -  பிரிந்தவிடத்துத் தான்
பெற்ற, பெருக்கம் எய்திய சிறப்பின்கண்ணும் மனமகிழ்ந்து கூறும்.

சிறப்பாவன பகைவென்று  திறை முதலியன கோடலும்   பொருண்
முடித்தலுந் துறைபோகிய ஓத்தும் பிறவுமாம்.

உ-ம்:

“கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவும்” (அகம்.93) எனவும், தாழிருள்
துமிய”     (குறுந். 270)     என்பதனுட்    “செய்வினை     முடித்த
செம்மலுள்ளமொடு”   எனவும்,    மனமகிழ்ந்து    கூறியவாறு காண்க.
“முன்னியது முடித்தனமாயின்” என்னும் (169) நற்றிணையுட் பொதுப்படச்
சிறப்புக் கூறியவாறு காண்க. 

பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும்  -  அச்சிறப்புக்களை  எய்திய
தலைவன்  பெரிய  புகழையுடைத்தாகிய தேரையுடைய  பாகரிடத்தும்:
கூற்று நிகழ்த்தும்.

அவரது சிறப்பு உணர்த்துதற்குப் பாகரெனப் பன்மையாற் கூறினார்.

“இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
ஏறிய தறிந்த தல்லது வந்த
ஆறுநனி யறிந்தன்றோ விலனோ தாஅய்
முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில்
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
இழிமி னென்றநின் மொழிமருண் டிசினே
வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ
மானுரு வாகநின் மனம்பூட்சிடினையோ
உரைமதி வாழியோ வலவ எனத்தன்
வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக்கொண்டு புக்கன னெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே.”  (அகம்.384)

இதனாற் பாகன் சிறப்புக் கூறியவாறு காண்க.

“மறத்தற் கரிதாற் பாக பன்னாள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:47:44(இந்திய நேரம்)