Primary tabs


அக்
காடுகவர் பெருந்தீ யோடுவயின் ஓடலின்
அதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு
மதர்புலி வெரீஇய மையல் வேழத்
தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு
ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக்
கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி
யருஞ்செல வாற்றா ஆரிடை ஞெரேரெனப்
பரந்துபடு பாயல் நவ்வி பட்டென
இலங்குவளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண்டு
இன்னகை இனையம் ஆகவும் எம் வயின்
ஊடல் யாங்குவந் தன்றென யாழநின்
கோடேந்து புருவமொடு குவவுநுத னீவி
நறுங்கதுப் புளரிய நன்னர் அமயத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்
போற்றா யாகலிற் புலத்தியால் எம்மே.”
(அகம்.39)
இதனுள் வறுங்கை காட்டிய வாயல் கனவினென நனவின்றிச்
சென்றவற்றைத் தலைவன் கூறியவாறு காண்க. இதுவும் இருவர்க்குமாம்.
அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை
வேண்டற்கண்ணும் - செயற்கு அரிதாகிய
வினையை முடித்த
தலைமையை எய்திய காலத்தே தலைவி
விருந்தெதிர் கோடலோடே
நீராடிக் கோலஞ்செய்தல்
முதலியவற்றைக் காண்டல் வேண்டிய
இடத்தும்: தலைவன் கூற்றுநிகழ்த்தும்.
உ-ம்:
“முரம்புதலை மணந்த நிரம்பா இயவின்
ஓங்கித் தோன்றும் உமண்பொலி சிறுகுடிக்
களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப
உச்சிக்கொண்ட ஓங்குகுடை வம்பலீர்
முற்றையு முடையமோ மற்றே பிற்றை
வீழ்மா மணிய புனைநெடுங் கூந்தல்
நீர்வார் புள்ளி யாக நனைப்ப
விருந்தயர் விருப்பினள் வருந்துந்
திருந்திழை யரிவைத் தேமொழி நிலையே.”
(நற்.374)
என இதனுள் விருந்தயர் விருப்பினளென விருந்தொடு நல்லவை
வேட்டுக் கூறியவாறு காண்க.
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும் கேளிர்
ஒழுக்கத்துப் புகற்சிக்
கண்ணும் - வினைமுற்றிப் புகுந்த தலைமகனை எதி