தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5412


 

ன்றாய் விலங்கினை
ஈர மிலாத இவன்தந்தை பெண்டிருள்
யாரில் தவிர்ந்தனை கூறு;
நீருள், அடைமறை ஆயிதழ்ப் போதுபோற் கொண்ட
குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ
இவன்மன்ற யான்நோவ உள்ளங்கொண் டுள்ளா
மகனல்லான் பெற்ற மகனென்று அகனகர்
வாயில் வரையிறந்து போத்தந்து தாயர்
தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர்
தத்தங் கலங்களுட் கையுறை என்றிவற்
கொத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன்பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃதொத்தன் சீத்தை
செறுத்தக்கான் மன்ற பெரிது;
சிறுபட்டி, ஏதிலார் கைஎம்மை எள்ளுபு நீதொட்ட
மோதிரம் யாவோயாங் காண்கு;
அவற்றுள், நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச்
சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள்
குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ்
செறியாப் பரத்தை இவன்றந்தை மார்பின்
பொறியொற்றிக் கொண்டாள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை;
அன்னையோ இஃதொன்று,
முந்தைய கண்டும் எழுகல்லா தென்முன்னர்
வெந்தபுண் வேலெறிந் தற்றா இஃதொன்று
தந்தை யிறைத்தொடீஇ மற்று; இவன், தன்கைக் கண்
தந்தார் யார்; எல்லாஅ விது
இஃதொன்று,
என்னொத்துக் காண்க பிறரும் இவற்கென்னுந்
தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை
இதுதொடுக என்றவர் யார்;
அஞ்சாதி;
நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த
பூவெழி லுண்கண் அவளுந் தவறிலள்
வேனிற் புனலன்ன நுந்தையை நோவார் யார்
மேல்நின்றும் எள்ளி இதுஇவன் கைத்தந்தாள்
தான்யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறுடையேன்”                       (கலி.84)

என வரும்.

தன்வயிற் சிறைப்பினும்-தலைவனின் தான் புதல்வற்குச் சிறந்தாளாகி
அத்தலைவன் அவன்  காதலித்த  பரத்தையர்   மாட்டுஞ்  செல்லாமற்
புதல்வனைத் தன்பாற் சிறை செய்தற் கண்ணு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:51:14(இந்திய நேரம்)