தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5415


 

வண்டு தாது உண்ட  மலரினும்  பலரெனத்  தீமையின்  முடித்தவாறுங்
காண்க.

“அணிற்பல் லன்ன” (குறுந்.49)  என்னும்   பாட்டுக்   கற்பாகலின்
இதன்பாற்படும்.

(கொடுமையொழுக்கம் தோழிக்கு உரியவை வடுவறு சிறப்பிற் கற்பில்
திரியாமைக் காய்தலும் உவத்தலும்  பிரித்தலும்  பெட்டலும்  ஆவயின்
வரூஉம்பல்வேறு நிலையினும்) கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை
-   பரத்தையிற்  பிரிவும்  ஏனைப்பிரிவுகளும்  ஆகித்  தலைவன்கண்
நிகழுங்   கொடுமை  யொழுக்கத்தில்  தோழி  கூறுதற்கு  உரியளென
மேற்கூறுகின்றவற்றைக் கேட்டவழி;வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமை -
எஞ்ஞான்றுங்   குற்றமின்றி வருகின்ற பிறப்பு  முதலிய  சிறப்பிடத்துங்
கற்பிடத்துங்   திரிவுபடாதபடி;   காய்தலும்   உவத்தலும்   பிரித்தலும்
பெட்டலும் நிலையினும்  -  தோழி கூற்றினை வெகுளலும்  மகிழ்தலும்
அவளைப்   பிரித்தலும்    பின்னும்  அவள்  கூற்றினைக்  கேட்டற்கு
விரும்புதலுமாகிய நிலையின்கண்ணும்;  ஆவயின்  வரூஉம் நிலையினும்
- அத்தோழியிடத்துத் தலைவனைக் காய்தலும்  உவத்தலும்  பிரித்தலும்
பெட்டலுமாய்  வரும் நிலையின்கண்ணும்;    பல்வேறு    நிலையினும்
-   இக்கூறியவாறன்றிப்    பிறவாற்றாய்ப்    பலவேறுபட்டு    வரும்
நிலையின்கண்ணும்:

அவன் வயினென்னாது ‘ஆவயி’  னென்றார்,   தோழியும்   பொரு
ளென்பதுபற்றி.

உ-ம்:

“இதுமற் றெவனோ தோழி துனியிடை
இன்ன ரென்னும் இன்னாக் கிளவி
இருமருப் பெருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாற்பெய் பைம்பயிர் ஆரும்ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரேம் ஆகிய நமக்கே.”       (குறுந்.181)

இது   தோழி   இன்னாக்கிளவி  கூறியதனை  இதுபொழுது  கூறிப்
பயந்த தென்னெனக் காய்ந்து கூறினாள்.

“பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்
டுடும்படைந் தன்ன நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்திற் கோட்டுமூக் கிறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்றுநாட் டாரிடைச்
சேறு நாமெனச் சொல்லச் சேயிழை
நன்றெனப் புரிந்தோய் நன்றுசெய் தனையே
செயல்படு மனத்தர் செய்பொருட்
ககல்வ ராடவ ரதுவதன் பண்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:51:50(இந்திய நேரம்)