தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5436


 

லஞ்செவி” என்னும் (5) பாலைக்கலியுள்,

“பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு
எந்நாளோ நெடுந்தகாய் நீசெல்வது
அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே.”   (கலி.5)

இதனுட்,   ‘புரிந்தனை’  யென   இறப்பும்  ‘இறக்கு’மென  எதிரும்
மரபில். தப்பாமல் வந்தவாறு காணக்.

“வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவயர்ந் தனையா னீயே நன்றும்
நின்னயந்துறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ விரைந்துசெய் பொருளே.”   (ஐங்குறு.309)

இஃது எதிரது நோக்கிற்று.

“புறவணி நாடன் காதன் மடமகள்
ஒண்ணுதல் பசப்ப நீசெலில் தெண்ணீர்ப்
போதவிழ் தாமரை யன்னநின்
காதலம் புதல்வ னழுமினி முலைக்கே.”      (ஐங்குறு.424)

இதுவும் அது.

இனிப் ‘பிற’ வருமாறு:

“பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்காற் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென விசைக்கும்
கடும்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண்
கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர்
நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின்
வந்தனர் வாழி தோழி கையதை
செம்பொற் கழல்தொடி நோக்கி மாமகன்
கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும்
அவவுக்கொள் மனத்தே மாகிய நமக்கே.”        (நற்.212)

இது தலைவிக்கு வரவுமலிந்தது.

“நீலத் தன்ன நீர்பொதி கருவின்
மாவிசும் பதிர முழங்கி ஆலியின்
நிலந்தண் ணென்று கானங் குழைப்ப
இனந்தேர் உழவர் இன்குர லியம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவின்
திரிமருப் பிரலை பைம்பயிர் உகள
ஆர்பெயல் உதவிய கார்செய் காலை
நூனெறி நுணங்கிய கானவில் புரவிக்
கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன்
வாய்ச்செல வணக்கிய தாப்பரி நெடுந்தேர்
ஈர்ம்புறவு இயங்குவழி யறுப்பத் தீந்தொடைப்
பையு ணல்யாழ் செவ்வழி பிறப்ப
இந்நிலை வாரா ராயின் தந்நிலை
எவன்கொல் பாண உரைத்திசிற் சிறிதெனக்
கடவுட் கற்பின்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:55:57(இந்திய நேரம்)