தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5451


 

கடிதல். இவை அறிவர் கூற்றாதலின்  புறப்புறப்  பொருளாயிற்றென
உணர்ந்துகொள்க. (13)

அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி

155. இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங்
கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின்

இஃது அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்.)     கிழவனுங்    கிழத்தியும்   அவர்வரை   நிற்றலின் -
தலைவனுந்       தலைவியும்     அவ்வறிவரது      ஏவலைச்செய்து
நிற்பராதலின்: இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும்  -   அவரைக்
கழறி ஓரெல்லையிலே  நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் எ-று.

அஃது,    உணர்ப்புவயின்   வாராது    ஊடிய     தலைவிமாட்டு
ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப.

“உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.”          (குறுந்.295)

இது, தலைவனைக் கழறியது.

“மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
யெனை மாட்சித் தாயினு மில்.”               (குறள்.52)

இது, தலைவியைக் கழறியது. (14)

தலைவற்குப் புலவியு மூடலு நிகழுமிடம் இவை எனல்

156. உணர்ப்புவரை இறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலுங் கிழவோற் குரிய.

இது, தலைவற்குப் புலவியும் ஊடலும் நிகழுமிடங் கூறுகின்றது.

(இ-ள்.)    உணர்ப்புவரை   இறப்பினும்  -  கற்பிடத்துத்  தலைவி
ஊடியவழி  அவன் தேற்றத் தேறுமெல்லை இகந்தனளாயினும்; செய்குறி 
பிழைப்பினும் -  களவின்கட் டலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்;
புலத்தலும்   ஊடலுங்    கிழவோற்கு    உரிய  -   உள்ளஞ்  சிறிது
வேறுபடுதலும்   அவ்வேறுபாடு  மிக்கு  நீடுநின்று தேற்றியக்கால் அது
நீங்குதலுந் தலைவற்குரிய எ-று.

எனவே,     கற்பிற்கும்     களவிற்கும்    புலத்தலும்    ஊடலும்
உரியவென்றார்.    புலவியும்    ஊடலுங்  கற்பிற்கே  பெரும்பான்மை
நிகழ்தலிற் கற்பிற்கு  அவை உரியவென்கின்றார்,  அவை  களவிற்குஞ்
சிறுபான்மை உரிமைபற்றிச்  சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோக்கி.
 

“எவ்வி யி
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:58:53(இந்திய நேரம்)