தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5465


 

கித்  தவறுசெய்  தேமேயென்றும்  பரத்தைமை  நீங்குவனென்றார்.
‘புகினு’   மெனவே    பிறர்   மனைப்  புதல்வரென்பது   பெற்றாம்.
தொன்முறை  மனைவி எதிர்ப்பட்டதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க.

இனிப், பரத்தைமையிற் பிரிவொழிந்து மனைக்கண் இருந்ததற்கு,

உ-ம்:

“மாத ருண்கண் மகன்விளை யாடக்
காதலிற் றழீஇ யினிதிருந் தனனே
தாதார் பிரச முரலும்
போதார் புறவின் நாடுகிழ வோனே.”        (ஐங்குறு.406)

இன்னும் இவ்வாறு வருவன பிறவும் உய்த்துணர்ந்து கொள்க. (31)

தலைவி புலவி நீங்குங்கால முணர்த்தல்

169. தாய்போற் கழறித் தழீக் கோடல்
ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப
கவவொடு மயங்கிய காலை யான.

இது, தலைவி புலவி கடைக்கொள்ளும் காலம் உணர்த்துகின்றது.

(இ-ள்.) தாய்பாற் கழறித் தழீஇக் கோடல்-பரத்தையிற் பிரிவு நீங்கிய
தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக்  கொள்ளு   மாற்றான்
மேல்நின்று மெய்கூறுங் கேளிராகிய  தாயரைப்போலக்  கழறி   அவன்
மனக்கவலையை மாற்றிப் பண்டுபோல   மனங்கோடல்;    ஆய்மனைக்
கிழத்திக்கும் உரித்தென மொழிப - ஆராய்ந்த  மனையறம்  நிகழ்த்துங்
கிழத்திக்கும் உரித்தென்று கூறுப;  கவவொடு  மயங்கிய  காலையான -
அவன் முயக்கத்தான் மயங்கிய காலத்து எ-று.

என்றது,  தலைவன்  தவற்றிற்கு  உடம்பட்டுக் கலங்கினமை கண்ட
தலைவி  அதற்கு  ஆற்றாது  தன்  மனத்துப்  புலவியெல்லாம் மாற்றி
இதற்கொண்டும் இனையை யாகலெனத்  தழீஇக்  கொண்டமை கூறிற்று.
தலைவன் தன் குணத்தினும்  இவள்   குணம்  மிகுதிகண்டு  மகிழவே
தலைவி தன்னைப் புகழ்ந்த குறிப்பு உடையளென்பதூஉங் கொள்க. (32)

தலைவி குணச்சிறப்புரைத்தல்

அவன்சோர்பு காத்தல் கடனெனப் படுதலின்
மகன்தாய் உயர்புந் தன்னுயர் பாகுஞ்
செல்வன் பணிமொழி இயல்பாக லான.

இதுவுந் தலைவி குணச் சிறப்புக் கூறுகின்றது.

(இ-ள்.) அவன் சோர்பு காத்தல்  கடன்  எனப்படுதலின்  -  தான்
நிகழ்த்துகின்ற   இல்லறத்தான்    தலைவற்கு   இழுக்கம்   பிறவாமற்
பாதுகாத்தல் தலைவிக்குக் கடப்பாடென்று கூறப்படுதலான், மகன்  தாய்
உயர்பும் தன் உயர்பு ஆகும் - மகன்  தாயாகிய மாற்றாளைத் தன்னின்
இழிந்தா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:01:39(இந்திய நேரம்)