தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5475


 

தாம் எ-று.

‘வேந்துறுதொழி’  லென்பதனை இரட்டுற  மொழிதலென்பதனான்
வேந்தனுக்கு    மண்டிலமாக்களுந்    தண்டத்தலைவரு   முதலியோர்
உறும் பிரிவும்   யாண்டின   தகமெனவும்   பொருளுரைக்க.  ’தொழி’
லென்றது   அதிகாரத்தாற்   பிரிந்து    மீளும்    எல்லையை.  அது,
‘நடுவுநிலைத்  திணையே  நண்பகல்   வேனிலொடு’   (தொல்.அகத்.9)
என்பதனாற் பிரிவிற்கோதிய  இருவகைக் காலத்துள்ளும் முதற் கணின்ற
சித்திரை தொடங்கித் தையீறாகக்  கிடந்த  பத்துத் திங்களுமாம். இனிப்
பத்தென்னாது   யாண்டென்றதனாற், ‘பின்பனிதானும்’  (தொல்.அகத்.10)
என்பதனாற் பிரிவிற்கோதிய  இருவகைக் காலத்துள்ளும் முதற் கணின்ற
சித்திரை தொடங்கித் தையீறாகக்  கிடந்த பத்துத்  திங்களுமாம். இனிப்
பத்தென்னாது    யாண்டென்றதனாற், ‘பின்பனிதானும்’ (தொல்.அகத்.10)
என்பதனாற் கொண்ட  சிறப்பில்லாத  பின்பனிக்குரிய  மாசிதொடங்கித்
தையீறாக  யாண்டு முழுவதூஉங்  கொள்ளக் கிடந்ததேனும்   அதுவும்
பன்னிரு திங்களுங்  கழிந்த  தன்மையின்  யாண்டினதகமாமா றுணர்க.
இதற்கு  இழிந்த  எல்லை  வரைவின்மையிற் கூறாராயினார் : அது,

“இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக”        (குறுந்.189)

எனச் சான்றோர் கூறலின்.

“நிலநாவில் திரிதரூஉஉம் நீ்ண்மாடக் கூடலார்
புலநாவில் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றோ
பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால்
சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை”     (கலி.35)

இது,   பின்பனியிற்   பிரிந்து  இளவேனிலுள் வருதல் குறித்தலின்
இருதிங்கள் இடையிட்டது.

“கருவிக் காரிடி யிரீஇய
பருவ மன்னவர் வருதுமென்றதுவே.”          (அகம்.139)

இது, கார்குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடையிட்டது.

‘வேளாப்  பார்ப்பான்’ (அகம்.24) என்பது   “தைஇ நின்ற தண்
பெயர் கடைநாட் பனியிருங் கங்குல்” என்றலின்யாண்   டென்பதூஉம்,
அது கழிந்ததன்மையின்   அஃது   அகமெனவும்  பட்டதென்பதூஉம்
தலைவன் வருதுமென்று  காலங் குறித்ததற் கொத்த வழக்கென்றுணர்க,
காவற்பிரிவும்,    வேந்துறுதொழிலெனவே  அடங்கிற்று,  தன்கொண்ட
நாட்டிற்குப் பின்
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:03:35(இந்திய நேரம்)