தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5491


 

இது, தலைவியான் தோழிக்கு வருவதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.) அறத்தொடு நிற்குங் காலத்தன்றி - தலைவி இக்களவினைத்
தமர்க்கறிவுறுத்தல்   வேண்டுமென்னுங்  கருத்தினளாகிய  காலத்தன்றி;
தோழி   அறத்தியன்  மரபிலளென்ப  -  தோழி அறத்தினியல்  பாகத்
தமர்க்குக்கூறும் முறைமையிலளென்று கூறுவர் புலவர் எ-று.

காலமாவன   நொதுமலர்வரைவும் வெறியாட்டெடுத்தலும் முதலியன.
தலைவி   களவின்கண்ணே   கற்புக்கடம்   பூண்டு   ஒழுகுகின்றாளை
நொதுமலர் வரைவைக்  கருதினார் என்பதூஉம்,  இற்பிறந்தார்க்கேலாத
வெறியாட்டுத் தம்மனைக்கண்  நிகழ்ந்த  தூஉந்  தலைவிக் கிறந்துபாடு
பிறக்குமென்று உட்கொண்டு  அவை பிறவாமற் போற்றுதல் தோழிக்குக்
கடனாதலின் இவை நிகழ்வதற்கு முன்னே  தமர்க்கறிவித்தல் வேண்டும்;
அங்ஙனம் அறிவியாதிருத்தலின் வழுவாயமைந்தது.

“இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கின்
கண்ணகன் தூமணி பெறூஉ நாடன்
அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் சிறுதொடி
யெம்மில் வருகுவை நீயெனப்
பொம்ம லோதி நீவி யோனே.”              (குறுந்.379)

இது, நொதுமலர் வரைவுகூறி உசாவி அறத்தொடு நின்றது.

“கடவுட் கற்சுனை யடையிறந் தவிழ்ந்த.”          (நற்.34)

இது, வெறியாட்டெடுத்தவழி அறத்தொடு நின்றது.

“அகவன் மகளே அகவன் மகளே.”             (குறுந்.23)

இது, கட்டுக்காணிய நின்றவிடத்து அறத்தொடு நின்றது,

அதுவும்   வெறியாட்டின்கண்  அடங்கும்.  தலைவிக்குக் குறிப்பினு
மிடத்தினுமல்லது    வேட்கை   நெறிப்பட   வாராமையிற்  சின்னாள்
கழித்தும்  அறத்தொடு   நிற்பாளாகலானுஞ்   செவிலியும்    நற்றாயுங்
கேட்ட பொழுதே அறத்தொடு நிற்பராகலானும் ஆண்டு வழுவின்று. (12)

அறத்தொடு நிற்கும்வகை இவையெனல்

207, எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்
கூறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு
உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ
அவ்வெழு வகைய என்மனார் புலவர்.

இது அவ்வறத்தொடு நிலை இனைத்தென்கின்றது.

(இ-ள்)  எளித்தல்  -  தலைவனை எளியனாகக் கூறுதல்; ஏத்தல் -
அவனை உயர்த்துக்   கூறல்;    வேட்கை   உரைத்தல்   - அவனது
வேட்கை மிகுத்துரைத்துக் கூறல்; கூறுதல் உசாதல் - தலைவியுந் தோழி
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:06:46(இந்திய நேரம்)