Primary tabs


ணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை
உதணாற் கடிந்தான் உளன்.”
(திணை.நூற்.2)
இதனுள் அளகத்தின் மேலாய்ந்தெனவே பூத்தந்தமை கூறினாள்.
“பிறிதொன் றின்மை யறியக் கூறிக்
கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக்
கடுஞ்சூள் தருகுவல் நினக்கே.”
(அகம்.110)
இது தலைப்பாடு.
“நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மணம் அயர்கஞ் சின்னாள்
கலங்கல் ஓம்புமின் இலங்கிழை யீரென
ஈர நன்மொழி தீரக் கூறித்
துணைபுணர் ஏற்றின் எம்மொடு வந்து
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்டுறை நிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண்
டன்றை அன்ன விருப்போ டென்றும்
இரவரன் மாலையனே வரு தோறுங்
காவலர் கடுகினுங் கதநாய் குரைப்பினும்
நீதுயில் எழினும் நிலவுவெளிப் படினும்
வேய்புரை மென்தோள் இன்துயில் என்றும்
பெறாஅன் பெயரினும் முனிய லுறாஅன்
இளமையின் இகந்தன்றும் இலனே.” (குறிஞ்சிப்.231-244)
எனவும்,
“வளமையில் தன்நிலை திரிந்தன்றும் இலனே.” (குறிஞ்சி.245)
எனவும்,
“கன்மழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாளிவண்
மயங்கிதழ் மழைக்கண் கலுழும் அன்னாய்” (ஐங்குறு.220)
என வருவன உண்மைசெப்பல்.
“காமர் கடும்புனல்” (கலி.39)
என்பதனுள் இரண்டு வந்தன.
பிறபுமன்ன.
(13)
தோழி அறத்தொடு நிற்றல் தலைவி
விருப்பத்தான்நிகழுமெனல்
208. உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்
அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப.
இது, மேலதற்கொரு புறனடை.
(இ-ள்.)
உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின் - தலைவியர்க்கு
ஏதமுற்ற இடத்தன்றித் தோழியா அவ்வாறு மறை
புலப்படுத்துக்
கூறாராதலின்; அப்பொருள் வேட்கைக்கிழவியின்
உணர்ப - அம்மறை
புலப்படுத்துதல் விருப்பத்தைத் தலைவியர் காரணத்தான்
தோழியர்
உணர்வர் எ-று.
‘உணர்ப’ என்று உயர்திணைப் பன்மையாற் கூறவே தலைவியருந்
தோழியரும் பலரென்றார். ‘கிழவி’ யென்றாரேனும் “ஒருபாற்
கிளவி”
(தொல்.பொ.222) யென்பதனாற்
பன்மையாகக் கொள்க. உயிரினுஞ்
சிறந்த நாணுடையாள்