தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5514


 

இது, தலைவன்  தலைவியைப்     பாராட்டியவழி     வருவதொரு
வழுவமைக்கின்றது.

(இ-ள்.) கிழவி  பாராட்டே -  தலைவன்  தலைவியைப் பாராட்டிய
பாராட்டு; செய்பொருள்   அச்சமும்   -   யாஞ்    செய்யக்  கருதிய
பொருட்கு  இவள் இடையூறாவள் கொலென்று தலைவன் அஞ்சிய அச்
சத்தையும்;  வினைவயின்  பிரிவும்  -   தான்   பொருள்  செய்தற்குப்
பிரிகின்றதனையும்; மெய் பெற உணர்த்தும்-ஒரு தலையாகத் தலைவிக்கு
உணர்த்தும் எ-று.

அப்பாராட்டுக் கிழவிய தாகலிற் கிழவி பாராட்டென்றார்.

“நுண்ணெழின் மாமை”  (கலி.5)  என்பதனுட்  கழிபெரு  நல்கலால்
தலைவன் செய்பொருட்கஞ்சியவாறும்   அவன்    பிரியக்கருதியதூஉந்
தலைவியுணர்ந்தாள் அப்பாராட்டினானென் றுணர்க.

அன்பானன்றிப்  பொருள்  காரணத்தாாற்    பாராட்டினமையானும்
தனைச்   செவ்வனங்கொள்ளாது       பிறழக்         கோடலானும்
இருவர்க்கும்வழுவாமென்றமைத்தார்.                          (38)

தலைவி பரத்தையைப் புகழினும் உள்ளத்தூடல் உண்டெனல்

233. கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத் தூடலுண்டென மொழிப.

இது, தலைவிக்கட் டோன்றியதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.)  கற்புவழிப்பட்டவள் - கற்பின் வழிநின்ற தலைவி; பரத்தை
ஏத்தினும்   -   பரத்தையைப்   புகழ்ந்து கூறினாளாயினும்; உள்ளத்து
ஊடல்   உண்டென   மொழிப  -  உள்ளத்துள்ளே  ஊடின  தன்மை
உண்டென்று கூறுவர் புலவர் எ-று.

பரத்தையை    ஏத்தவே      தலைவன்கட்    காதலின்மைகாட்டி
வழுவாயிற்றேனும் உள்ளத்தூடலுண்மையின் அமைக்க வென்றார்.

“நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவுளன் னோள்நின்
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே.”         (அகம்.16)

என வரும்.

‘ஏத்தினும்’ என்ற உம்மையான் ஏத்தாமற்  கூறும்பொழு  தெல்லாம்
மாறுபடக் கூறலுளதென்பது பெற்றாம்.

“என்னொடு புரையுந ளல்லள்
தன்னொடு புரையுநர்த் தானறி யுநளே.”        (பதிற்றுப்.)

என வரும்.                                              (39)

கிழவன்குறிப்பை அறியக் கிழவி பிறள்குணத்தைப்

புகழ்தலுமுரியள் எனல்

234. கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை யுணர்தற்கும் உரியள்.

இஃது, எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது;  உள்ளத்தூட  லின்றியும்
பிறளொருத்தியைத் தலைவி புகழுமென்றலின்.

(இ-ள்.) கிழ
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 09:11:16(இந்திய நேரம்)