தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   134


    வியின், துணையின், கலத்தின், முதலின்,
    ஒருவழி உறுப்பின், குழுவின், என்றா,
    தெரிந்து மொழிச் செய்தியின் நிலையின், வாழ்ச்சியின்,
    திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன,
    கூறிய மருங்கில் தோன்றும் கிளவி,
    ஆறன் பால என்மனார் புலவர்.

    81 ஏழாகுவதே,
    கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி,
    வினை செய் இடத்தின், நிலத்தின், காலத்தின்,
    அனை வகைக் குறிப்பின் தோன்றும், அதுவே.

    82 கண், கால், புறம், அகம், உள், உழை, கீழ், மேல்,
    பின், சார், அயல், புடை, தேவகை, எனாஅ,
    முன், இடை, கடை, தலை, வலம், இடம், எனாஅ,
    அன்ன பிறவும் அதன் பால என்மனார்.

    83 வேற்றுமைப் பொருளை விரிக்கும் காலை,
    ஈற்று நின்று இயலும் தொகைவயின் பிரிந்து,
    பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்
    எல்லாச் சொல்லும் உரிய என்ப.

    84 கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு
    உரிமையும் உடைத்தே, கண் என் வேற்றுமை.

    85 சினை நிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும்
    வினை
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:27:39(இந்திய நேரம்)