தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   137


    மருங்கில் வேற்றுமை சாரும்.

    107 எதிர் மறுத்து மொழியினும், தத்தம் மரபின்
    பொருள் நிலை திரியா, வேற்றுமைச் சொல்லே.

    108 கு, ஐ, ஆன் என வரூஉம் இறுதி
    அவ்வொடும் சிவணும், செய்யுளுள்ளே.

    109 எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின்
    குவ்வும் ஐயும் இல்' என மொழிப.

    110 இதனது இது இற்று' என்னும் கிளவியும்,
    அதனைக் கொள்ளும் பொருள்வயினானும்,
    அதனால் செயற்படற்கு ஒத்த கிளவியும்,
    முறைக் கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும்,
    பால் வரை கிளவியும், பண்பின் ஆக்கமும்,
    காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும்,
    பற்று விடு கிளவியும், தீர்ந்து மொழி கிளவியும்,
    அன்ன பிறவும், நான்கன் உருபின்
    தொல் நெறி மரபின, தோன்றலாறே.

    111 ஏனை உருபும் அன்ன மரபின;
    மானம் இலவே, சொல் முறையான.

    112 வினையே, செய்வது, செயப்படுபொருளே,
    நிலனே, காலம், கருவி, என்றா,
    இன்னதற்கு, இது பயன் ஆக, என்னும்
    அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ,
    ஆயெட்டு' என்பதொழில் முதனிலையே.

    113 அவைதாம்,
    வழங்கு இயல் மருங்கின்,
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:27:56(இந்திய நேரம்)