தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   154


    பொருளைச் செய்தது போலத்
    தொழிற்படக் கிளத்தலும் வழக்கு இயல் மரபே.

    247 இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
    சிறப்பத் தோன்றும், மயங்குமொழிக் கிளவி.

    248 ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்.

    249 இடை' எனப்படுப பெயரொடும் வினையொடும்
    நடை பெற்று இயலும்; தமக்கு இயல்பு இலவே.

    250 அவைதாம்,
    புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும்,
    வினை செயல் மருங்கின் காலமொடு வருநவும்,
    வேற்றுமைப் பொருள்வயின் உருபு ஆகுநவும்,
    அசைநிலைக் கிளவி ஆகி வருநவும்,
    இசைநிறைக் கிளவி ஆகி வருநவும்,
    தம்தம் குறிப்பின் பொருள் செய்குநவும்,
    ஒப்பு இல் வழியான் பொருள் செய்குநவும், என்று
    அப் பண்பினவே, நுவலும் காலை.

    251 அவைதாம்,
    முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும்,
    தம் ஈறு திரிதலும் பிறிது அவண் நிலையலும்,
    அன்னவை எல்லாம் உரிய என்ப.

    252 கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று
    அம் மூன்று என்ப `மன்னைச் சொல்லே'.

    253 விழைவே, காலம் ஒழியிசைக் கிளவி, என்று
    அம் மூன்று என்ப`தில்லைச் சொல்லே'.
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:29:35(இந்திய நேரம்)