Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
பெருப்பும் ஆகும்.
340 படரே உள்ளல் செலவும் ஆகும்.
341 பையுளும் சிறுமையும் நோயின் பொருள.
342 எய்யாமையே அறியாமையே.
343 நன்று பெரிது ஆகும்.
344 தாவே வலியும் வருத்தமும் ஆகும்.
345 தெவு கொளல் பொருட்டே.
346 தெவ்வுப் பகை ஆகும்.
347 விறப்பும், உறப்பும், வெறிப்பும் செறிவே.
348 அவற்றுள்,
விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.349 கம்பலை, கம்மை, கலியே, அழுங்கல்,
என்று இவை நான்கும் அரவப் பொருள.350 அவற்றுள்,
அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.351 'கழும்' என் கிளவி மயக்கம் செய்யும்.
352 செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.
353 விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.
354 கருவி தொகுதி.
355 கமம் நிறைந்து இயலும்.
356 அரியே ஐம்மை.
357 கவவு அகத் திடுமே.
358 'துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்,
இசைப் பொருட் கிளவி' என்மனார் புலவர்.359 அவற்றுள்,
இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்.360 இலம்பாடு, ஒற்கம், ஆயிரண்டும் வறுமை.
361 ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள.