Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று
அனைத்தே-செய்யுள் ஈட்டச் சொல்லே.398 அவற்றுள்,
இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.399 ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்,
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்,
இரு பாற்று' என்ப 'திரிசொல் கிளவி'.400 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி.401 வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.402 சிதைந்தன வரினும், இயைந்தன வரையார்.
403 அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை,
வலிக்கும் வழி வலித்தலும், மெலிக்கும் வழி மெலித்தலும்,
விரிக்கும் வழி விரித்தலும், தொகுக்கும் வழித் தொகுத்தலும்,
நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழி குறுக்கலும்,
நாட்டல் வலிய என்மனார் புலவர்.404 நிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று,
அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே.405 அவற்றுள்,
நிரல் நிறைதானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றி,
சொல் வேறு நிலைஇ, பொருள் வேறு நிலையல்.