Primary tabs


உயிர்க்கு. வறியார்க்கு
ஈக, அதனால் புகழ் உண்டாக
வாழ்க,
அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை
ஆகலான்.
இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற
காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி
முதற்று
புறநா.18 ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக ''ஈதல்''
என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு
உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது. உரைப்பார்
உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்.
உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், வறுமையான்
இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம்.
புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்புறநா.27 அவற்றுள்
''உரைப்பார் உரைப்பவை'' என எல்லார்க்கும் உரிய வழக்கினையே
எடுத்தாராயினும்,
இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும்
கொள்ளப்படும், படவே ''பாடுவார் பாடுவன எல்லாம் "புகழாம்
என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க.
இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம்
சொல்லுக;
புகழ் ஈவார் மேல் நிற்கும்'' என்று உரைப்பாரும் உளர். அது புகழது
சிறப்பு நோக்காமை அறிக. ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்றில்.
தனக்கு இணையின்றாக ஓங்கிய
புகழல்லது; உலகத்து
இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. இணை
இன்றாக ஓங்குதலாவது: கொடுத்தற்கு அரிய உயிர் உ