Primary tabs


பூத உடம்பு இறத்தல்.
நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார்
வித்தகர் ஆகலின், ''வித்தகர்க்கு அல்லால்'' அரிது என்றார். இவை
இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும்
மேன்மை கூறப்பட்டது.
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை
நன்று. மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க;
அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல்
நன்று புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின்
மக்களாய் என்பதூஉம், ''மக்களாய்ப் பிறவாமை'' என்ற
அருத்தாபத்தியான் ''விலங்காய்ப் பிறத்தல்'' என்பதூஉம் பெற்றாம்.
இகழ்வார் இன்மையின் ''நன்று'' என்றார் புகழ்பட வாழாதார்
தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்?. தமக்குப்
புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப்
பிறர்
இகழ்ந்தவழி, ''இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது'' என்று
தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? புகழ்பட வாழலாயிருக்க
அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின்,
இகழ்வாரை என்றார். வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம்
இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின். புகழ்
என்னும் எச்சம்
பெறலாயிருக்க, அது
பெறாது ஒழிவாராயின், வையகத்தோர்க்கு
எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ''எச்சம்''
என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது ''நிற்றலின்''
இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.
வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா