அருள்மிகு கீரக்களுர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
இக்கோயில் தற்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள கீரக்களுரில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டொன்று இவ்வூரை இராசேந்திரசோழ வளநாட்டு ஆர்வலக்கூற்றத்து பிரம்மதேயம் குலதீபமங்கலத்து கீரைக்கள்ளுர் சபை என்று குறிப்பிடுகிறது. எனவே இவ்வூரில் ஒரு மகாசபை இயங்கி வந்ததை அறியமுடிகிறது. மேலும் இவ்வூர் ஒரு பிரம்மதேயமாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆதித்தகரிகாலனின் 2,3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் பராந்தகன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
- பார்வை 702