தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு திருச்சென்னம்பூண்டி சடையார் திருக்கோயில்

கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது. பல்லவர் காலத்தில் இக்கோயில் மண் தளியாக இருந்திருக்க வேண்டும். பல்லவர் காலக் கல்வெட்டுகள் கற்றூண்களிலே காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் இத்தலத்தை திருக்கடைமுடி என்று பாடியுள்ளார். காவிரியின் வடகரைத் தலமாகவும், கொள்ளிடத்திற்கு தென்கரைத் தலமாகவும் சடையார் கோயில் அமைந்துள்ளது. காவிரியின் வளத்தினாலே அதன் கரையில் கட்டப்பட்டுள்ள இக்கற்றளி அதிகமான கொடைகளைப் பெற்றுள்ளது. பல்லவர் காலத்தில் மண்டளியாக இக்கோயில் இருந்திருக்க வேண்டும். முதலாம் பராந்தகன் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:37(இந்திய நேரம்)
சந்தா RSS - சடையார் கோயில்