அருள்மிகு பழுவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில் முற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த கற்றளியாகும். தாங்குதளம் முதல் முடி வரை கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது தளங்கள் இன்றி காணப்படுகின்றது. எனவே விமானம் இன்ன பாணியென்று அறியக்கூடவில்லை. கருவறை சதுர வடிவமானது. கருவறையில் சோழர்கால இலிங்கம் அமைந்துள்ளது. அர்த்தமண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கருவறை விமானத்தின் மூன்றுபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் வடக்கில் பிரம்மனும், மேற்கில் திருமாலும் உள்ளனர். தெற்கில் உள்ள தென்முகக் கடவுள் சிற்பம் பிற்காலத்தியது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன.
- பார்வை 1302