அருள்மிகு மண்டகப்பட்டு குடைவரைக் திருக்கோயில்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளகுடைவரைக் கோயில் இலக்சிதன் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இக்குடைவரை கோயில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இக்கோயில். தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது. மிகவும் எளிய, எழில் வாய்ந்த குடைவரைக் கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.
- பார்வை 2554