தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில்

நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. உபபீடம் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 13-10-2016 13:18:43(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - திருக்கோயில்கள்-temple