அருள்மிகு அழகிய சிங்கப் பெருமாள் திருக்கோயில்
1000 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் காலக் கட்டடக்கலையைப் பெற்றுள்ளது. திருவேளுக்கை என்ற பெயரில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகிறது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது. கி.பி.8-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டட கலைப்பாணி எதும் எஞ்சவில்லை. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது. திருமதில் சுவர் அமைந்துள்ளது. கிணறு ஒன்று உள்ளது. சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை. கோபுரம் தற்காலத்தில் அமைக்கப்பட்டது.
- பார்வை 322