அருள்மிகு ஸ்ரீகச்சி அனேகதங்காவதம்
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காஞ்சி கைலாசநாதர் கோயிலுக்கருகில் திருக்கச்சி அனேகதங்காவதம் திருத்தலம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற பழம் பெரும் திருத்தலமாகும். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தைப் பாடியுள்ளார். பல்லவர் காலத்தில் இக்கோயில் செங்கல் தளியாய் இருந்திருக்கவேண்டும். பின்பு பிற்கால சோழர் காலத்தில் கற்றளியாய் அமைக்கப்பட்டிருக்கக்கூடும். இங்குள்ள முதலாம் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. விநாயகரும் குபேரரும் இக்கோயில் மூலவரான ஸ்ரீஅனேதங்காவதேஸ்வரரை வழிபட்டனர். “அனேகம்“ என்றால் யானை என்று பொருள்.
- பார்வை 467