தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு கைலாசமுடையார் திருக்கோயில்

சென்னையிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருந்து உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வானூர் வட்டத்தில் உலகாபுரம் அமைந்துள்ளது. இச்சிவன் கோயில் “கைலாசமுடையார் கோயில் என்றும், “அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜராஜனுடைய 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டொன்று அம்பலவன் கண்டராதித்தன் என்பவன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறது. பிற்காலச் சோழர் காலத்தில் இவ்வூர் ஒய்மா நாட்டின் ஒரு பிரிவான பேரையூர் நாட்டில் அடங்கி இருந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:26(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - திருக்கோயில்கள்-temple