தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு கொடும்பாளுர் மூவர் திருக்கோயில்

கொடும்பாளுர் மூவர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருக்குவேளிரின் மிகச் சிறந்த கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கு சான்றாகும். கொடும்பாளுர் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் மிகவும் தொன்மையான ஊராகும். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளோடு இவ்வழியே புகாரிலிருந்து மதுரைக்கு வருவதாக சிலம்பு குறிப்பிடுகிறது. அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான இடங்கழி நாயனாரின் பிறப்பிடம் கொடும்பாளுர் ஆகும். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருக்குவேள் மன்னன் பூதி விக்கிரமகேசரி கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:28(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - திருக்கோயில்கள்-temple