அருள்மிகு காளியாபட்டி சிவன் திருக்கோயில்
இக்கோயில் கி.பி.9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழனால் எடுப்பிக்கப்பட்டதாகும். ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் சிதிலமடைந்துள்ளது. மகாமண்டபத்தின் தாங்குதளம் மட்டும் காணப்படுகின்றது. இதில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
- பார்வை 496