தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு திருப்பாசூர் ஸ்ரீவாசீஸ்வரர் திருக்கோயில்

திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில் திருவள்ளுர் வட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்த இத்திருக்கோயில் தேவார மூவராலும் பாடல் பெற்றது. கி.பி.6-நூற்றாண்டிலேயே இக்கோயில் செங்கற் தளியாய் இருந்திருக்கவேண்டும். பின்பு சோழர்கள் காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு காணப்படுவதைக் கொண்டு இம்மன்னன் இங்கு தனது ஆட்சியாண்டில் திருப்பணிகளை செய்துள்ளான் என அறியமுடிகிறது. இங்குள்ள தேவகோட்ட சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. தொண்டை மண்டலத்திற்கே உரிய தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்ததாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:49(இந்திய நேரம்)
சந்தா RSS - திருப்பாசூர்