அருள்மிகு திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயில் இறைவன் திருமலை பெருமாளுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார். சோழர்கள் காலத்தில் இத்தலத்தில் வைத்திய சாலை ஒன்று இருந்துள்ளது. ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் இந்த வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் பற்றிய விவரங்கள் குறித்த கல்வெட்டு ஒன்று முகமண்டபத்தின் சுவரில் உள்ளது. விசயநகர நாயக்கர் காலத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது.
- பார்வை 1528