அருள்மிகு கீழையூர் இரட்டைக் திருக்கோயில்
இரட்டைக் கோயில் “அவனிகந்தர்ப்ப ஈஸ்வரர் கோயில்“ என்றும், “அவனி கந்தர்ப்ப ஈஸ்வர கிருஹம்“ என்றும் அழைக்கப்படுகிறது. இருகோயில்கள் அடுத்தடுத்து ஒற்றை மதிலை அரணாகக் கொண்டு உள்ளன. இப்பெயர்கள் அங்குள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகின்றன. இக்கோயிலின் பெயர்களும் தற்பொழுது முறையே “தென்வாயில் சிறுகோயில்“(அகஸ்தீஸ்வரர் கோயில்) என்றும், “வடவாயில் சிறு கோயில் (அருணாச்சலேஸ்வரர் கோயில்) என்றும் அழைக்கப்பெறுகின்றன. வடவாயில் சிறுகோயிலில் உள்ள தேவகோட்டத்தில் அண்ணாமலையார் உள்ளதால் இக்கோயில் அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இக்கோயில் முற்காலச் சோழர் கலைப்பாணியாகும்.
- பார்வை 1183