அருள்மிகு மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் அருகே வெள்ளீசுவரர் கோயில் உள்ளது. மாங்காடு அம்மனுக்கே உரியது என்பதால் வெள்ளீசுவரர் கோயிலில் அம்பாள் கருவறை இல்லை. அம்பாள் பாதம் வடிவம் மட்டுமே உள்ளது. காஞ்சிக் காமாட்சியம்மனுக்கு முந்தையத் தலம் இது என்று கருதப்படுகிறது. இவ்விடத்தில் சிவனை நோக்கி அம்மன் பஞ்சாக்னியின் நடுவே ஒற்றைக்காலில் தவம் இருந்து சிவனைக் கண்டு வரம் பெற்று, பின்பு காஞ்சிபுரம் சென்று சிவனை மணப்பதாக தலவரலாறு கூறுகிறது.
- பார்வை 1244