அருள்மிகு மாங்காடு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில்
பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் அருகே வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளது. உள்ளது. சீர் கொண்டு வந்த பெருமாளாக தன் வலது உள்ளங்கையில் கணையாழி (மோதிரம்) ஒன்றை வைத்துள்ளார். மார்க்கண்டேய மகரிஷியின் திருவுருவமும் இக்கோயிலில் உள்ளது. அவரே பெருமாளை இத்தலத்தில் தங்குமாறு வேண்டினார். இக்கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் இல்லை. மாங்காடு காமாட்சி அம்மனின் உபகோயிலாக இக்கோயில் திகழ்கிறது.
- பார்வை 924