தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு பெருங்குடி அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

பெருங்குடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுவதால் சுந்தரசோழன் கி.பி.968 காலத்தில் இக்கோயில் எழுப்பப் பெற்றதாக இருக்கலாம். சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலனின் 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வீரபாண்டிய தலைக்கொண்ட கோப்பரகேசரி என்று ஆதித்த கரிகாலன் குறிப்பிடப்படுகிறான். பிற்காலச் சோழர்காலக் கல்வெட்டுகளில் பெருமுடி அகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலும் சிற்பங்களும் சுந்தரசோழன் கால கட்டட-சிற்பக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:38(இந்திய நேரம்)
சந்தா RSS - அகஸ்தீஸ்வரர் கோயில்