தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு பெருங்குடி அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

பெருமுடி பரமேஸ்வரம், திருப்பெருமுடி பரமேசுவரர் ஸ்ரீகோயில்

ஊர் :

பெருங்குடி

வட்டம் :

அந்தநல்லூர்

மாவட்டம் :

திருச்சி

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

அகஸ்தீஸ்வரர், திருப்பெருமுடி பரமேசுவரர், பெருமுடி அகத்தீசுவரமுடையார்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

சிவகாமசுந்தரி

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

சோழமாதேவி, பாச்சில் அமலேஸ்வரர் கோயில் (அழகிய மணவாளம்), கோபுரப்பட்டி சிவன் கோயில்

சுருக்கம் :

பெருங்குடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுவதால் சுந்தரசோழன் கி.பி.968 காலத்தில் இக்கோயில் எழுப்பப் பெற்றதாக இருக்கலாம். சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலனின் 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வீரபாண்டிய தலைக்கொண்ட கோப்பரகேசரி என்று ஆதித்த கரிகாலன் குறிப்பிடப்படுகிறான். பிற்காலச் சோழர்காலக் கல்வெட்டுகளில் பெருமுடி அகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலும் சிற்பங்களும் சுந்தரசோழன் கால கட்டட-சிற்பக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. கருவறைக் கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, சண்டிகேசுவரர், விஷ்ணு, முருகன் கணபதி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன் (இரண்டாம் ஆதித்தன்)

கல்வெட்டு / செப்பேடு :

சுந்தரசோழன் காலத்தில் கி.பி.969-இல் இக்கோயில் திருப்பெருமுடி பரமேஸ்வரர் ஸ்ரீகோயில் என்று பெயர் பெற்றிருந்தது. போசள மன்னன் வீரராமநாதன் காலத்தில் திருப்பணி நடைபெற்றது. விசயநகர மன்னன் விருப்பணன் காலத்தில் அம்மன் திருமுன் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள ஆதித்த கரிகாலன் கல்வெட்டு அவனை வீரபாண்டியன் தலை கொண்ட பரகேசரி வர்மன் என்று குறிப்பிடுகிறது.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை விமான தேவகோட்டங்களில் தெற்கே தென்முகக் கடவுளும், மேற்கே மாதொரு பாகனும், வடக்கே நான்முகனும் அமைக்கப்பட்டுள்ளனர். சண்டிகேசுவரர் சிற்பம் தனியாக உள்ளது. முகமண்டபத்தில் விஷ்ணு, ஆலிங்கனமூர்த்தி, முருகன், சப்தமாதர்கள், சனைஸ்சரன், கணபதி ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அரைத்தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. விமானத்தின் கழுத்துப்பகுதியில நாற்புறமும் நந்தி காட்டப்பட்டுள்ளது. கொடுங்கைக்கு கீழே பூதவரி செல்கிறது. பூதகணங்கள் ஆடல் பாடலுடன் காட்சியளிக்கின்றன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் ஒரு தளமுடையதாக தற்போது விளங்குகிறது. கருவறை விமானத்தின் கூரைப்பகுதி வரை கல்ஹாரமாகவும், அதற்கு மேல் பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்கோயில் முழுவதும் கற்றளியாக சோழர்காலத்தில் கட்டப்பட்டது. போசளர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதை கல்வெட்டு கூறுகிறது. தாங்குதள உறுப்புகள் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. தேவகோட்டங்களில் இறைவடிவங்கள் அமைந்துள்ளன. பஞ்சரக் கோட்டங்களிலும் திருவுருவங்கள் உள்ளன. அர்த்தமண்டபம், முகமண்டபம் பெற்று விளங்குகிறது. விசயநகரர் காலத்தில் அம்மன் திருமுன் கட்டப்பெற்றுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவனும், நின்ற நிலையிலும் அம்மன் கருவறையில் அம்மன் காட்டப்பட்டுள்ளனர். முகமண்டபத்தில் முருகன், விஷ்ணு, ஆலிங்கனமூர்த்தி, கணபதி, சனைஸ்சரண் ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

அமைவிடம் :

அகஸ்தீஸ்வரர் கோயில், பெருங்குடி-622 506, திருச்சி

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி - வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் அடுத்து திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பெருங்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் வழியாக பெருங்குடி செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

உய்யக்கொண்டான், வயலூர், பெருங்குடி

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி

தங்கும் வசதி :

திருச்சி விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:38(இந்திய நேரம்)