தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு ஆனையூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டி நாட்டில் ஆனையூர் ஒரு முக்கியப் படைத்தளமாக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும். கல்வெட்டுகளில் சோழன் தலைகொண்ட வீரபாண்டியனின் 10-வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டே மிகவும் பழமையானதாகும். இக்கல்வெட்டு கோயில் கருவறை நுழைவாயிலின் நிலையில் காணப்படுகின்றது. ஆனையூர் ஒரு தேவதானமாக இருந்தபோதிலும், இங்கிருந்த நிலங்களுக்காக அரசிற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வரி செலுத்தப்பட்டிருக்கிறது என்பது சுந்தரபாண்டியனின் கல்வெட்டிலிருந்து தெரியவருகின்றது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:53(இந்திய நேரம்)
சந்தா RSS - ஆனையூர்