தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு மன்னார்கோவில் இராஜகோபாலசுவாமி குலசேகரஆழ்வார் திருக்கோயில்

சோழர்கள் காலத்தில் இக்கோயில் “இராஜேந்திர விண்ணகர்“ என்றழைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேதபுரி என்று வழங்கப்பட்டுள்ளது. குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். குலசேகரஆழ்வார் பூசித்து வந்த பெருமாள் திருவுருவம் இன்றும் இக்கோயிலில் உள்ளது. இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோயில் தாங்குதளத்தில் யாளி வரிகளும், யானைகளும் காட்டப்பட்டுள்ளன. மேலும் பாதகண்டப்பகுதியில் சதுர வடிவ புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று நிலையில் இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார். நின்று, இருந்து, கிடந்த கோலங்களில் திருவுருவங்கள் உள்ளன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:44(இந்திய நேரம்)
சந்தா RSS - இராஜகோபால சுவாமி குலசேகரஆழ்வார் கோயில்