தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு எறும்பூர் கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்

ஊரின் தென்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.கல்வெட்டுகளில் எறும்பூர் என்பது உறுமூர் என்றே வழங்கப்படுவதால் உறுமூரே காலப்போக்கில் எறும்பூராகி இருக்கலாம். இக்கோயில் சிறிய சதுர வடிவக் கருவறையைக் கொண்டுள்ளது. ஒற்றைத் தளத்துடன் வேசரபாணி விமானத்தை அதாவது வட்டவடிவ சிகரத்தைக் கொண்டுள்ளது. கருவறை விமானம் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்ட இக்கோயில் காலவெள்ளத்தால் தளப்பகுதியை இழந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் யோகநிலையில் அமர்ந்துள்ளனர்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:36(இந்திய நேரம்)
சந்தா RSS - எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோயில்