தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு எறும்பூர் கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

சிறுத்திருக்கோயில் பெருமானடிகள்

ஊர் :

எறும்பூர்

வட்டம் :

சிதம்பரம்

மாவட்டம் :

கடலூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

கடம்பவனேஸ்வரர், சிறுத்திருக்கோயில் பெருமானடிகள்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

கல்யாணசுந்தரி

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள்

சுருக்கம் :

ஊரின் தென்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.கல்வெட்டுகளில் எறும்பூர் என்பது உறுமூர் என்றே வழங்கப்படுவதால் உறுமூரே காலப்போக்கில் எறும்பூராகி இருக்கலாம். இக்கோயில் சிறிய சதுர வடிவக் கருவறையைக் கொண்டுள்ளது. ஒற்றைத் தளத்துடன் வேசரபாணி விமானத்தை அதாவது வட்டவடிவ சிகரத்தைக் கொண்டுள்ளது. கருவறை விமானம் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்ட இக்கோயில் காலவெள்ளத்தால் தளப்பகுதியை இழந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் யோகநிலையில் அமர்ந்துள்ளனர். இச்சிற்பங்கள் கோயிலின் தனிச்சிறப்பாகும். முதலாம் பராந்தகச் சோழனின் 28-வது ஆட்சியாண்டில் கி.பி.935-இல் இக்கோயில் அட்டபரிவாரங்களுடன் அதாவது பரிவார தேவதைகளுக்கான உபகோயில்கள் எட்டுடன் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன் இக்கோயில் மண்தளியாக இருந்திருக்க வேண்டும். சிறுத்திருக்கோயில் என்ற பெயருக்கேற்ப இக்கோயில் சிறிய கற்றளியாகவே இருக்கிறது. பரிவார ஆலயங்கள் காலவெள்ளத்தில் அழிந்துபட்டுள்ளன. பாண்டியர்களின் பங்களிப்பும் இக்கோயிலுக்கு இருந்து வந்துள்ளது. அம்மன் கோயிலை பாண்டியர்கள் கட்டியுள்ளனர். யார் காலத்தில் எப்போது கோயில் கட்டப்பட்டது என்ற விவரத்துடன் உள்ள கோயில் இதுவாகும்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

இளங்கோவன் குணவன் அபராஜிதன் என்பவன் ஸ்ரீ விமானக் கற்றளி மற்றும் எட்டு உபகோயில்களை (அட்ட பரிவார ஆலயங்கள்) எழுப்பியுள்ளான். முதலாம் பராந்தகனின் 28-வது ஆட்சியாண்டில் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது. அதற்கு முன் இக்கோயில் மண் தளியாக இருந்திருக்க வேண்டும். கல்யாணசுந்தரி அம்மன் என்ற கோயிலும், சிவன் கோயில் முன்மண்டபமும் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தி்ல் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முதலாம் பராந்தகனுடைய கல்வெட்டில் இறைவன் சிறுத்திருக்கோயில் பெருமானடிகள் என்று அழைக்கப்பட்டுள்ளார். முதலாம் பராந்தகன், சுந்தரசோழன், முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை தேவக்கோட்டங்களில் தெற்கே யோகநிலையில் தென்முகக் கடவுளும், மேற்கே யோகியாக திருமாலும், வடக்கில் யோகநிலையில் அமர்ந்துள்ள நான்முகனும் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளனர். நந்தி சிற்பம் ஒன்று உள்ளது.

கோயிலின் அமைப்பு :

ஊரின் தென்பகுதியில் கிழக்கு நோக்கிய வாயிலுடன் கடம்பவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.கல்வெட்டுகளில் எறும்பூர் என்பது உறுமூர் என்றே வழங்கப்படுவதால் உறுமூரே காலப்போக்கில் எறும்பூராகி இருக்கலாம். இக்கோயில் சிறிய சதுர வடிவக் கருவறையைக் கொண்டுள்ளது. ஒற்றைத் தளத்துடன் வேசரபாணி விமானத்தை அதாவது வட்டவடிவ சிகரத்தைக் கொண்டுள்ளது. கருவறை விமானம் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்ட இக்கோயில் காலவெள்ளத்தால் தளப்பகுதியை இழந்துள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் திருமாலும், வடக்கில் நான்முகனும் யோகநிலையில் அமர்ந்துள்ளனர். இச்சிற்பங்கள் கோயிலின் தனிச்சிறப்பாகும். முதலாம் பராந்தகச் சோழனின் 28-வது ஆட்சியாண்டில் கி.பி.935-இல் இக்கோயில் அட்டபரிவாரங்களுடன் அதாவது பரிவார தேவதைகளுக்கான உபகோயில்கள் எட்டுடன் கட்டப்பட்டுள்ளது. அதற்கு முன் இக்கோயில் மண்தளியாக இருந்திருக்க வேண்டும்.

அமைவிடம் :

கடம்பவனேஸ்வரர் கோயில், எறும்பூர்-608 704, சிதம்பரம் வட்டம், கடலூர்

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள சேத்தியாதோப்பு கூட்டு சாலையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் சிதம்பரம் வட்டத்தில் உள்ள எறும்பூர் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

எறும்பூர்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

விருத்தாசலம், சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

விருத்தாசலம், சிதம்பரம், கடலூர் விடுதிகள்
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:36(இந்திய நேரம்)