அருள்மிகு குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில்
தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தலம் இது. தேவாரப்பபாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 90-வது தலமாகும். திருநாவுக்கரசர் பாடியுள்ளார். மேலும் இக்கோயில் பல்லவர் காலத்தில் மண்டளியாக இருந்து சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது. ஆதிசேஷன் பூசை செய்ததால் நாகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்று என்பர். குடந்தைக் கீழ்கோட்டமுடைய நாயனார் என்று கல்வெட்டுகளில் இறைவன் குறிப்பிடப்படுகிறார். இக்கோயிலின் கட்டட அமைப்பு நன்கு வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டது. எனவே சித்திரை மாதத்தில் 11, 12, 13 ஆகிய நாட்களில் சூரியனின் ஒளி கருவறையின்மீது நன்கு விழுகிறது.
- பார்வை 2302