அருள்மிகு கூரம் சிவன்கோயில்
காஞ்சிபுரம் கூரம் சிவன்கோயில் முதலாம் பரமேசுவர வர்மனால் கி.பி.679-இல் எடுப்பிக்கப்பட்டது. இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடப்பட்ட மிகவும் புகழ் வாய்ந்த கூரம் செப்பேடு தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தூங்கானை மாடவடிவில் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். காலத்தால் மிகவும் பழமையானது. பாம்பினை கரத்தில் பற்றிய ஊர்த்துவ ஜானு நடனமாடும் கூரம் நடராஜர் சிற்பம் புகழ் பெற்றது. இக்கோயிலில் காலத்தால் முந்திய ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.
- பார்வை 796