தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு கூரம் சிவன்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர்

ஊர் :

கூரம்

வட்டம் :

காஞ்சிபுரம்

மாவட்டம் :

காஞ்சிபுரம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில், சிவபுரம்

சுருக்கம் :

காஞ்சிபுரம் கூரம் சிவன்கோயில் முதலாம் பரமேசுவர வர்மனால் கி.பி.679-இல் எடுப்பிக்கப்பட்டது. இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடப்பட்ட மிகவும் புகழ் வாய்ந்த கூரம் செப்பேடு தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தூங்கானை மாடவடிவில் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். காலத்தால் மிகவும் பழமையானது. பாம்பினை கரத்தில் பற்றிய ஊர்த்துவ ஜானு நடனமாடும் கூரம் நடராஜர் சிற்பம் புகழ் பெற்றது. இக்கோயிலில் காலத்தால் முந்திய ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் நந்திவர்மன், நிருபதுங்க வர்மன் மற்றும் இராஜராஜசோழன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.7--ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மன்

கல்வெட்டு / செப்பேடு :

கூரம் செப்பேடு இவ்வூரில் கண்டெடுக்கப்பட்டது. இச்செப்பேடு இக்கோயிலைக் கட்டிய மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மப் பல்லவனால் தானமாக வழங்கப்பட்டது. இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை.

கோயிலின் அமைப்பு :

கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் தளங்கள் தற்போது இல்லை. தெற்கு நோக்கிய நுழைவு வாயிலைக் கொண்டுள்ளது.

அமைவிடம் :

கூரம், ஈஞ்சம்பாக்கம் வழி காஞ்சிபுரம் - 631502

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள் காஞ்சிபுரம் அருகில் ஈஞ்சம்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

ஈஞ்சம்பாக்கம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

ஈஞ்சம்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

காஞ்சிபுரம் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:32(இந்திய நேரம்)