அருள்மிகு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்
தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 36-வது தலம் இது. முதலாம் பராந்தக சோழனால் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது. அதிட்டானம் முதல் கலசம் வரை கற்றளியாக்க அம்மன்னன் ஆவடுதுறை அரனுக்கு அய்ந்நூறு பொன்கழஞ்சுகள் கொடையளித்துள்ள செய்தி இங்குள்ள அவனது மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. சிதம்பரம் கோயிலுக்கு பொன் வேய்ந்த பராந்தகன் பொன்னை அளித்து திருவாவடுதுறைக் கோயிலை கற்றளியாக்கியுள்ளான். தேவார மூவராலும் பாடல்பெற்ற இத்தலம் முற்காலச் சோழர் தம் கட்டடக்கலைக்கும், சிற்பத்திறனுக்கும் மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது.
- பார்வை 1629