தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருள்மிகு விசலூர் சிவன் திருக்கோயில்

ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் இங்குள்ள இறைவனை வசுகீஸ்வரமுடைய மகாதேவர் கோயில் எனக் குறிப்பிடுகிறது. பாண்டியர் காலத்து கல்வெட்டொன்று இக்கோயில் இறைவனை வரதுகசுரமுடைய நாயனார் எனக்குறிப்பிடுகிறது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:35(இந்திய நேரம்)
சந்தா RSS - விசலூர் கோயில்