தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு விசலூர் சிவன் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

வாசுகீஸ்வரமுடைய மகாதேவர் கோயில்

ஊர் :

விசலூர்

வட்டம் :

குன்னாண்டார் கோயில்

மாவட்டம் :

புதுக்கோட்டை

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

மார்க்கபந்தீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

நார்த்தாமலை, குன்னாண்டார் கோயில், காளியாபட்டி கோயில்

சுருக்கம் :

ஒரு தளக் கற்றளியாக விளங்குகிறது. சுவர்களில் கோட்டங்களும், அரைத்தூண்களும் அழகு செய்கின்றன. நாகரபாணி விமானத்தைக் கொண்டுள்ளது. கருவறை சதுரவடிவமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் இங்குள்ள இறைவனை வசுகீஸ்வரமுடைய மகாதேவர் கோயில் எனக் குறிப்பிடுகிறது. பாண்டியர் காலத்து கல்வெட்டொன்று இக்கோயில் இறைவனை வரதுகசுரமுடைய நாயனார் எனக்குறிப்பிடுகிறது. காளியாபட்டி, திருப்பூர், பனங்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களைப் போல் இக்கோயில் கட்டடக் கலைப்பாணியில அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தச் சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

கல்வெட்டுகள் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

தள உறுப்பான கிரீவப்பகுதியின் (தலை) நடுவே தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே விஷ்ணு, வடக்கே பிரம்மா, நான்கு மூலைகளிலும் நந்தி, கருவறையில் இலிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

கோயிலின் அமைப்பு :

ஒரு தளக் கற்றளியாக அமைந்துள்ளது. நாகரபாணி விமானமுடையது. விமானத்தின் தள உறுப்புகளில் நான்குபுறமும் சிற்பங்கள் உள்ளன. தேவகோட்டங்கள் வெற்றிடங்களாக உள்ளன. எளிமையான கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது. அர்ததமண்டபமும், மகாமண்டபமும் கொண்டுள்ளது. மண்டபங்களின் சுவர்களிலும், விமானத்தின் கருவறைச் சுவர்களிலும் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இச்சுவர்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. திருச்சுற்று மாளிகையில் பல தனிச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சண்டேசுவரருக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.

அமைவிடம் :

விசலூர்-622 504, குன்னாண்டார் கோயில் தாலுகா, புதுக்கோட்டை

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

மதுரையிலிருந்து 140 கி.மீ. தொலைவிலுள்ள புதுக்கோட்டையிலிருந்து கீரனூர் வழியாக குன்னாண்டார் கோயில் செல்லலாம். அங்கிருந்து விசலூர் சிவன் கோயில் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

விசலூர், குன்னாண்டார் கோயில்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

புதுக்கோட்டை விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:35(இந்திய நேரம்)